சர்வதேச மகளிர் நிகழ்வும் நிஸா நூல் வெளியீட்டு நிகழ்வும் - 2023
சர்வதேச மகளிர் நிகழ்வும் நிஸா நூல் வெளியீட்டு நிகழ்வும் ஏறாவூர் நகர பிரதேச
செயலாளர் மாநாட்டு மண்டபத்தில் 14-03-2023 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை
மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் ஜனாபா நிஹாரா மௌஜூத் தலைமையில்
இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஜனாப் A.C.A.அப்கர்,
உதவி திட்டமிடல் பணிப்பாளர் M.A.H.சிஹானா ,கணக்காளர் திருமதி. T.வினோதன்,
நிர்வாக உத்தியோகத்தர் S.A.றஹீம் ,மேலதிக மாவட்ட பதிவாளர் A.M.M.Nafees,
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கோவிட் தொற்றுக் காலங்களில் உயிர்காக்கும் பணியினை செம்மையாக
நிறைவேற்றியமைக்காக பிரதேசத்தின் பெருமைக்குரிய பெண் எனும் விருது
ஏறாவூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஜனாபா பாத்திமா சாபிறா வஸீம்
அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்தோடு மகளிர் தின சிறப்பு மலரான நிஸா கன்னி மலராக
வெளியிடப்பட்டது. இம்மலர் வெளியீட்டு நிகழ்வில் எமது பிரதேசத்தை சேர்ந்த படைப்பாளிகள் மற்றும்
கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வினை ஏறாவூர் நகர பிரதேச செயலக
பெண்கள் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான J.காபிலா மற்றும் T. மபாஹிறா
ஆகியோர் ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் .







75வது சுதந்திர தின நிகழ்வுகள்
எமது ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இன்று இடம் பெற்ற இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வுகள்
பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் தலைமையில் வெகு சிறப்பாக நடை பெற்றது.
இந்நிகழ்வில் 75வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதற்கான அனுசரணையை ஏறாவூர் வர்த்தக சங்கம் வழங்கியிருந்ததோடு அதன் தலைவர்
அல்ஹாஜ் Y.M.சலீம் (ஐலீல்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து சமூக பராமரிப்பு நிலையத்தில் மரநடுகையும் இடம் பெற்றது.
நிகழ்வுகளைத் தொடர்ந்து ஊழியர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வுகளும்
சிறுவர்களுக்கான கலைக்கலாசார விளையாட்டுப் போட்டிகளோடு ஊழியர்களுக்கான
நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றது.
பொதுமக்களுக்கான விஷேட அறிவித்தல்
நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பில் தகுதியான நபர்களைக் கண்டறிதல்.
2002ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 7(1)ஆம் பிரிவின்
பிரகாரம் நலன்புரி நிவாரண பலன்களை செலுத்துதல் தொடர்பில் தகுதியான
அனைத்து நபர்களையும் கண்டறிய அரசு தீர்மாணித்துள்ளது. இதன்படி நீங்கள்
அரசின் மூலம் செயற்படும் சமுர்த்தி, முதியோர், அங்கவீனர், சிறுநீரக நோய் மற்றும்
பொது நிதி போன்றவற்றிலோ அல்லது நலன்புரி நன்மைகள் போன்றவற்றின் கீழ்
ஏற்கனவே பயன்பெறுபவராக இருப்பின் அல்லது பயன்பெற தகுதியானவராக இருப்பின்
கீழ்க் காணப்படும் படிவத்தின் படி தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்தில் நீங்கள்
நிரந்தரமாக வசிக்கும் வசிப்பிடத்திற்கு தொடர்புடைய கிராம அலுவலர்,
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,
சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர், முதியோர் உரிமைகள் ஊக்குவிப்பு உத்தியோகத்தர்களால்
வழங்கப்பட்ட சான்றிதழ்களுடன் 2022 செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் உங்களது
பிரிவு கிராம அலுவலரிடம் ஒப்படைக்கும் படி தயவாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.
நிஹாரா மௌஜுத்,
பிரதேச செயலாளர்,
ஏறாவூர் நகர்.
2022-09-05
Application Form / விண்ணப்பப் படிவம்

2023ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
இன்று ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத் (SLAS)
அவர்களின் தலைமையில் ADS, AO ,Accontant மற்றும் உத்தியோகத்தர்கள்,
ஊழியர்கள் பங்குபற்றுதலுடன் தேசியகொடி ஏற்றப்பட்டு, நாட்டுக்காக
உயிர்நீத்த உறவுகளை 2 நிமிட நினைவு கூர்ந்தும் கடமையை பொறுப்பேற்றல்
மற்றும் உறுதிப்பிரமான நிகழ்வு இடம்பெற்றது.





பொதுமக்களுக்கான அறிவித்தல்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில்
தொழில்புரிந்து கொண்டிருப்பவர்களின் குடும்ப அங்கத்தவர்கள்
யாரேனும் விசேட தேவையுடையோர்கள் இருப்பின்
(வழங்கப்படும் உபகரணங்கள் : - weelchair, ஊன்றுகோல், காது இயந்திரம், மூக்கு கண்ணாடி, சத்துணவு)
அவர்கள் உடனடியாக பிரதேச செயலகத்தில் கடமையாற்றும்
"வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை"
திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் தொடர்பு கொண்டு
பதியவும் (05-07-2022க்கு முன்னர்).
தேவைப்படும் ஆவணங்கள் :
1. வெளிநாட்டில் உள்ளவரின் பெயர், NIC இல., Passport இல., தேவையுடையோரின் பெயர், பிறந்த திகதி மற்றும் உறவு முறை
2. வைத்தியரின் அறிக்கை அல்லது கிளினிக் கொப்பி
3. DS Office - SSO report
தகவல் : வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பிரிவு,
ஏறாவூர் நகரம்.















