சர்வதேச சிறுவர் தினம் - 2025
ஒக்டோபர் 01 ம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் ஆகியோரின் தலைமையில் உலகை வழிநடாத்த அன்பால் போசியுங்கள் எனும் தொனிப்பொருளில் சிறுவர் தின நிகழ்வுகள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக "செயிரி" வாரத்தினை செயற்படுத்தும் இரண்டாம் நாள் நிகழ்வு
Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக "செயிரி" வாரத்தினை செயற்படுத்தும் இரண்டாம் நாள் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு. SH முஸம்மில் அவர்களின் தலைமையிலும் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலிலும் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் அவர்களினாலும் 02.09.2025 அன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதில் ஏறாவூர் நகர பிரதேச செயலகம் மற்றும் ஏறாவூர் நகர சமூக சேவை பராமரிப்பு நிலையத்தின் உட்சூழல் மற்றும் வெளிச் சூழல் சுத்தம் செய்யும் பணிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

சர்வதேச சுற்றாடல் தினக் கொண்டாட்டம்
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மர நடுகை மற்றும் சர்வதேச சுற்றாடல் தினக் கொண்டாட்டமானது எமது பிரதேச செயலாளரின் தலைமையில் 2025-06-05 ஆம் திகதி இன்று வியாழக்கிழமை மு.ப. 10.00 மணியளவில் மீராகேணி பிரதான வீதியில் மரங்கள் நடப்பட்டது.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் மற்றும் மீராகேணி சமூக ஆர்வலர்கள் அத்தோடு அக்கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் செயலகத்தின் உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு மரக் கன்றுகளையும் நட்டி வைத்தனர்.

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக "செயிரி" வாரத்தினை முன்னிட்டு முதலாவது நிகழ்வு
Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக "செயிரி" வாரத்தினை முன்னிட்டு முதலாவது நிகழ்வாக அறிவூட்டல் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு. SH முஸம்மில் அவர்களின் தலைமையில் 01.09.2025 அன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.


77வது சுதந்திர தினம் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்டது
இலங்கையின் 77வது சுதந்திர தினம் (04.02.2025) ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய ஜனாப் SH.முஸம்மில் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் உதியோகத்தர்களின் ஆக்கபூர்வமான சிந்தனைக்காக 5s எண்ணக்கரு தொடர்பாக பிரதேச செயலாளரால் விளக்கமளிக்கப்பட்டது.




















