"நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா" தேசிய நேர்மை வாரம் 2026
ஊழலற்ற, வினைத்திறனான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரச நிர்வாகக் கட்டமைப்பை கட்டியெழுப்பும் நோக்குடன், "நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா" தேசிய நேர்மை வாரம் (2026 ஜூலை 27 - ஜூலை 31) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
தனிப்பட்ட நன்மைகளைக் கருதாது பொதுமக்களின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கி, நெறிமுறை விழுமியங்கள் மற்றும் கொள்கை ரீதியான தரங்களுடன் ஒன்றிணைந்து, யாரும் பார்க்காதபோதும், எந்தவொருமேற்பார்வையும் இல்லாதபோதும், தனக்குத்தானே சுய கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளும் சரியான மற்றும் தார்மீகச் செயற்பாடுகளின் ஊடாக, கனிவான சேவையை வழங்கும் நேர்மையான அரச உத்தியோகத்தரை உருவாக்குவதற்குத் தேவையான பின்னணியை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதன் முதற்கட்டமாக, ஏறாவூர் நகர பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தேசிய நேர்மை சத்தியப்பிரமாணத்தை (உறுதிமொழி) 2026 ஜூலை 27 அன்று காலை பிரதேச செயலக வளாகத்தில் உறுதிபூண்டனர்.
அரச உத்தியோகத்தர்களிடையே சுய கட்டுப்பாடு, தார்மீகப் பொறுப்பு மற்றும் உயர் நெறிமுறை விழுமியங்களை பேணி, மக்களுக்கு சிறந்த சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு நடைபெற்றது.
"நேர்மையான அரச சேவை - சிறந்த நாளைக்கான அடித்தளம்!"















