- Details
- Parent Category: Top Menu
2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
ஏறாவூர் பிரதேச செயலகத்தின் 2025.01.01 இன் #கிளீன்_சிறீலங்கா (Clean srilanka) தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக 2025 ஆம் வருடத்தின் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் தேசிய விழா உடன் இலத்திரனியல் அலைவரிசை மூலம் நேரடியாக ஒலி/ ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஏறாவூர் பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சகல நடவடிக்கைகளிலும், அனைத்து பிரசைகள் உயர் சமூக அந்தஸ்தை அடைவதற்கு உறுதுணையாக அமைகின்ற, ஒற்றுமை, பொறுப்புக்கூறல், சிக்கனம், வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய விடயங்களை முன்னுதாரணமாக கடைப்பிடிப்பதற்கும், அத்தர நியமங்களை பாதுகாத்த வண்ணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அரச ஊழியர்கள் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலை திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் நிகழ்வில் சமர்ப்பிக்கபட்டது.


- Details
- Parent Category: Top Menu
மோட்டார் வாகன அனுமதி சீட்டு விநியோகம் தற்காலிக இடைநிறுத்தம் தொடர்பாக.
கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தேர்தல் கடமைகளுக்காக உத்தியோகத்தர்கள் செல்வதனால் 13,14 ஆம் திகதிகளில் (புதன்கிழமை, வியாழக்கிழமை)மோட்டார் போக்குவரத்து பிரிவின் மோட்டார் வாகன அனுமதிச்சீட்டு வழங்கும் சேவைகள் இடம்பெறாது என்பதனை பொதுமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
மீண்டும் 18/11/2024 ஆம் திகதியே இச்சேவைகள் இடம்பெறும் என்பதனால் இத்தினங்களில் அனுமதிப்பத்திரம் பெற வேண்டியவர்கள் முன்கூட்டியே (நாளைய தினம் 12/11/2024) பெற்றுக் கொள்ளுமாறு கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
ஏறாவூர் நகரம்.
11/11/2024
- Details
- Parent Category: Top Menu
- Details
- Parent Category: Top Menu
இளைஞர் அபிவிருத்திக் குழு 2023 - ஏறாவூர் நகர்
*இலங்கையில் இளைஞர் அபிவிருத்திக்காக ஒன்றினைந்த நோக்கில் பிரதேச இளைஞர் அபிவிருத்திக் குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.*
இளைஞர் அபிவிருத்திக்காக நேரடியாக தொடர்புபடும் மற்றும் பொறுப்புக்களை வகிக்கும் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும்
பிரதேச மட்டத்திலான அரச நிறுவனங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும்
இளைஞர் அபிவிருத்தி துறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் கொண்டு
பிரதேச இளைஞர் அபிவிருத்திக் குழு இன்று (07.07.2023) ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜூத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார மருத்துவ
அதிகாரி திருமதி. ஸாபிரா வஸீம் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.MHA.ஸிஹானா, பொலிஸ் நிலைய பதில் நிலையப்
பொறுப்பதிகாரி திரு. சன்ஜீவ குமாற, மட்டக்களப்பு மத்தி உதவிக் கல்வி பணிப்பாளர் ஜனாப். AM.முபாஸ்தீன், பிரதேச செயலக
வெளிக்கள உத்தியோகத்தர்கள், இளைஞர் கழக சம்மேளன தலைவர் உட்பட உறுப்பினர்கள், இளைஞர் கழக சம்மேளன ஆலோசகர்
MHM. பைஸல் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் இளைஞர்களது எதிர்வரும் ஐந்து ஆண்டுத் திட்டம் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டதுடன் எதிர்வரும் இரண்டு
வாரங்களுக்குள் பிரதேச இளைஞர் அபிவிருத்தி திட்டத்தை தயாரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.




- Details
- Parent Category: Top Menu
தேசிய சுற்றாடல் தினக் கொண்டாட்டம் - 2023
தேசிய சுற்றாடல் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சுற்றாடல் வாரத்தின்
இரண்டாம் நாளான (31-05-2023) திகதி வளி மாசடைதலை தடுத்தல் என்ற
தொனிப்பொருளின் கீழ் மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு
ஏறாவூர்-3A கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.

















