71வது சுதந்திர தின வைபவம் 2019

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் மிகவும் உணர்வு பூர்வமாக பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.
காலை 09.00மணிக்கு பிரதேச செயலாளர் திரு.ஏ.யூஸுஃப் அவர்களினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
காலை 09.20மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேசத்தின் உள்ளூர் திணைக்களத்தின் தலைவர்கள் நகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலாளரின் தலைமையுடன் ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு அதிதியாக கலந்து கொண்ட ஏறாவூர் நகர சபை உபதவிசாளர் கௌரவ ஜனாப்.M.L.றபுபாசம் அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர வரலாற்றை மிகவும் ஆழமாகவும் தெளிவுவாகவும் உரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் குளிர்பானம் என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு காலை 10.30மணிக்கு நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் குளிர்பானம் என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு காலை 10.30மணிக்கு நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது.














