பிராந்திய பொருளாதார வளர்ச்சியை நோக்கிய முன்னெடுப்பு: ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உள்ளூர் உற்பத்தியாளர் கண்காட்சி

ஒரு பிரதேசத்தின் நிலையான பொருளாதார வளர்ச்சி என்பது அப்பகுதியிலுள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோரின் வலுவாக்கத்திலேயே பெருமளவு தங்கியுள்ளது. அந்த வகையில், ஏறாவூர் நகர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களின் தயாரிப்புகளுக்குப் பொருத்தமான சந்தை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் உயரிய நோக்குடன் விசேட விற்பனைக் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில், உள்ளூர் உற்பத்தியாளர்களின் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கிலான இப்பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி 25.09.2026 அன்று பிரதேச செயலக வளாகத்திற்கு முன்பாக நடைபெற்றது.

மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு. S.H. முஸம்மில் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விற்பனைக் கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து பார்வையிட்டார். மேலும் Vidatha, EDB, RDO, சமுர்த்தி மற்றும் FDO ஆகிய உத்தியோகத்தர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இக்கண்காட்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

இங்கு உள்ளூர் உற்பத்தியாளர்களின் கைவண்ணத்தில் உருவான உணவுப் பொருட்கள், கைவினை மற்றும் பனையோலைத் தயாரிப்புகள், ஆடைகள், கைப்பைகள் மற்றும் தானிய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பொதுமக்கள் திரளாக வருகை தந்து பொருட்களைக் கொள்வனவு செய்து உள்ளூர் தொழில்முனைவோருக்குத் தமது பேராதரவை வழங்கினர்.

News & Events

08
ඔක්2026

சர்வதேச சிறுவர் தின நிகழ்வு 2026

    சர்வதேச சிறுவர் தின நிகழ்வு - பிரதேச...

28
සැප්2026
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உள்ளூர் உற்பத்தியாளர் கண்காட்சி.

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உள்ளூர் உற்பத்தியாளர் கண்காட்சி.

      பிராந்திய பொருளாதார வளர்ச்சியை நோக்கிய...

31
ජූලි2026
நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

    "நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா"...

« »
Scroll To Top