2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
2026 ஆம் ஆண்டின் கடமைகள் ஆரம்பிக்கப்படும் முதல் நாளாகிய சனவரி மாதம் 01 ஆம் திகதி ஏறாவூர் பிரதேச செயலகத்தில் சகல ஊழியர்களினதும் பங்குபற்றலுடன் கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் மதிப்புக்குரிய உதவி பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டின் கடமைகள் ஆரம்பிக்கப்படும் முதல் நாளாகிய சனவரி மாதம் 01 ஆம் திகதி ஏறாவூர் பிரதேச செயலகத்தில் சகல ஊழியர்களினதும் பங்குபற்றலுடன் கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் மதிப்புக்குரிய உதவி பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்களுக்கு வினைத்திறனுடைய மற்றும் பயனுறுதியுள்ள அரச சேவை ஒன்றினை வழங்குவதற்காக ஒட்டுமொத்த அரச சேவையும் அதற்காக திடசங்கட்பத்துடன் அர்ப்பணிக்க வேண்டியுள்ளமையினால் குறித்த தினத்தில் வழங்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அமைய நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேலும் அலுவலக முன்னரங்க சேவைகள் குறித்த மக்களது எண்ணங்கள் அல்லது கருத்துக்களைக் பதிவிடுவதற்கான QR code முறைமையிலான படிவ அமைப்பு அன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
.














