எமது நோக்கு

சர்வதேச தரத்திலான பொதுச்சேவை வழங்கும் இலங்கையின் முதற்தர பிரதேச செயலகம் .

எமது கொள்கை

புதுமை, டிஜிட்டல் மற்றும் நல்லாட்சியினை அடிப்படையாகக் கொண்டு, திறன் மிக்க, மக்கள் மையப்படுத்தப்பட்ட பொது சேவையினை வழங்கி, சமத்துவத்தினை உறுதி செய்வதுடன் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் தொடர்ச்சியான மேம்பாட்டை சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப முன்னெடுத்துச் செல்லுதல்.

கண்ணோட்டம்

அமைவிடம்

ஏறாவூர் நகர பிரதேச செயலகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள சுமார் 9.5 சதுர கிலோமீற்றர் பரப்பைக் கொண்டதாகும். இச்செயலகம் மாவட்டத்தில் நிலப்பரப்பில் 0.18 வீதத்தைதைக் கொண்டுள்ளது. கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு நகருக்கு தென்மேற்கு திசையில் சுமார் 12KM தூரத்தில் இப்பிரிவு அமைந்துள்ளது. 

பிரதேசத்தின் எல்லைகளாவன :-
வடக்கு - செங்கலடி பிரதேச செயலகம்
கிழக்கு - வங்காள விரிகுடா கடல்
மேற்கு - மட்டக்களப்பு வாவி
தெற்கு - ஆறுமுகத்தான் குடியிருப்பு

நிர்வாகப்பிரிவு

01.189 ஆறுமுகத்தான் குடியிருப்பு – 01

02. 190 ஏறாவூர்-01

03.190A ஏறாவூர் - 01A

04. 190B ஏறாவூர்- 01B

05. 191 ஏறாவூர்– 02

06. 191A ஏறாவூர்- 02A

07. 191B ஏறாவூர்- 02B

08. 191C ஏறாவூர்- 02C

09. 192 ஏறாவூர்– 03

10. 192A ஏறாவூர்– 06

11. 192B ஏறாவூர்- 03A

12. 192C ஏறாவூர்- 06A

13. 192D ஏறாவூர்- 06D

14. 193A மீராகேணி

15. 193B மிச்நகர்

16. 193C ஐயங்கேணி (தமிழ்)

17. 193D ஐயங்கேணி (முஸ்லிம்)

  ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் வரலாறு

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கே தன்னாமுனையும் மேற்கே தற்பொழுது ரிதிதென்ன என்று அழைக்கப்படும் முஸ்லிம் கிராமங்களையும் வடக்கே வெருகலையும் தெற்கே புல்லுமலை, மங்கள ஓயா ஆகிய கிராமங்களையும் கொண்டு ஏறாவூர் கோறளைப் பற்று உதவி அரசாங்கப் பிரிவு அலுவலகம் செங்கலடியில் இயங்கியது.

முதலில் அது திரு.பொன்னுத்துறை கிளார்க்கர் அவர்களின் இல்லத்திலும் பின்னர் மாவடி வேம்பு பகுதியில் ஒரு தோட்டத்திலும் அதன் பின்னர் செங்கலடி சென்றல் ஹோட்டல் பேக்கரிக்கு அருகில் செல்லையா போடியார் என்பவரின் கட்டடத்திலும் இயங்கியது. தற்பொழுது நிரந்தர கட்டடமொன்றில் ஏறாவூர் பற்று பிரதேசமாக இயங்கி வருகின்றது.

1978 நவம்பர் மாதம் ஏறாவூருக்கென தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவு அலுவலகம் திறக்கப்பட்டு புன்னைக்குடா வீதியிலுள்ள தனியார் கட்டடமொன்றில் இயங்கியது. அப்போதைய பாராளுமன்ற தலையீட்டினால் மேற்படி ஒரே நாளில் தனது சேவையை நிறுத்திக் கொள்ளவேண்டி ஏற்பட்டது.

பின் 1979 - 1980 வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டினால் ஒரு அதிகாரியுடன் வாரத்தில் இரண்டு நாள் ஏறாவூர் பட்டினாச்சி மன்ற கட்டடத்தில் உப அலுவலகமாக செயற்பட்டு பின்னர் மூடப்பட்டது.

பின்னர் 22.08.1990 திரு.U.L.M. ஹனீபா அவர்கள் ஏறாவூர் பற்று மேலதிக உதவி அரசாங்க அதிபராக நியமணம் செய்யப்பட்டு இரண்டு கடைகளில் எவ்வித தளபாடங்களுமின்றி ஒரு கிராம சேவக உத்தியோகத்தரை மட்டும் அலுவலகத்தில் வைத்துக்கொண்டு செயற்பாடுகள் ஆரம்பமாகின.

அதன் பின்னர் இவ்வூரின் வணிகப் பட்டதாரி ஜனாப். V. யூஸுப் நிருவாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து ஏறாவூர் உதவி அரசாங்க பணிமணைக்கு உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஜனாப். M.A.C.M. சாதிகீன், ஜனாப். M.K. முகைதீன் திரு. S.சின்னையா போன்றவர்கள் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டனர்.

12-06-1998ம் திகதிய வர்த்தமானி (657ம் பார்க்க) அறிவித்தலின் பிரகாரம் 01.01.1993 முதல் செயற்படும் வண்ணம் ஏறாவூர் நகர பிரதேச செயலகம் தனியான ஒரு பிரதேச செயலகமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

முதலாவது பிரதேச செயலாளராக திரு.K. விமலனாதன் இப்பதவிக்கு அமர்த்தப்பட்டு சுமார் 10 வருடங்களுக்கு மேலாக இங்கு கடைமையாற்றி வந்தார். இச்செயலகமானது 1979 இருந்து 1980 வரை நிரந்த கட்டடமொன்று இல்லாமல் ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வந்தது. நிரந்தர கட்டடமொன்றை அமைப்பதற்காக அன்றைய கிழக்கு உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் அல்ஹாஜ் A.L.M. அதாவுல்லாஹ் மேற்கொண்ட நிதி ஒதுக்கீட்டினைக் கொண்டு ஏறாவூர் ஆற்றங்கரை அருகே 29.08.2004 ம் திகதி கெளரவ அமைச்சர் A.L.M.அதாவுல்லாஹ் அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இப்பொழுது இச்செயலகமானது 29.01.2007 இல் அமைச்சர் கெளரவ அல்ஹாஜ் A.L.M. அதாவுல்லாஹ் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட புதிய கட்டடத்தில் இயங்கி வருகின்றது.

இலச்சினை

நெற்கதிர்கள் : இலச்சினையைச் சுற்றி அமைந்துள்ள பொன்னிற நெற்கதிர்கள் செழிப்பினைக் குறித்து நிற்கும் அதேவேளை, உள்ளுர் பொருளாதாரத்தில் விவசாயம் மற்றும் நெல் உற்பத்தியின் முக்கிய பங்கினைக் குறிக்கின்றன.
மீன்கள் : துள்ளிப்பாயும் இரண்டு நீல நிற மீன்கள், மீன்பிடித் தொழிலையும், குறிப்பாக உள்ளுர் கடல் நீரேரி (களப்பு) உட்பட நீர்நிலைகள் வழங்கும் இயற்கை வளங்களையும் குறிக்கின்றன.
சூரியனும் அலைகளும் : அலைகளுக்கு மேலால் உதயமாகும் சூரியன், எதிர்பார்ப்பு, நம்பிக்கை, புதிய தொடக்கம் மற்றும் பிரதேசத்தின் கரையோர இயல்புகளை குறிக்கிறது.
பற்சில்லுகள் : சூரியனுக்கு மேலே அமைந்துள்ள இந்தச் சின்னம், கைத்தொழில் வளர்ச்சி, மேம்பாடு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் உட்கட்டமைப்பு மீதான பிரதேசத்தின் கவனத்தைக் குறிக்கிறது.
பேனா முனை : உச்சியில் அமைந்துள்ள பேனா முனை, கல்வி, எழுத்தறிவு, அறிவு மற்றும் பிரதேச செயலகத்தின் நிர்வாகச் செயல்பாடுகளைக் குறிக்கிறது. 
பேனா முனையும் இலச்சினையின் வட்ட வடிவ அமைப்பும் இணைந்து ஒரு குவிமாடத்தின் நிழல் வடிவத்தை உருவாக்கி, பிரதேசத்தின் பெரும்பான்மை மக்களைப் பிரதிபலிக்கும் வகையில் இஸ்லாமியக் கட்டிடக்கலை அம்சமொன்றைப் பிரதிபலிக்கின்றது.
பச்சை நிற பின்னணி : பின்னணியாக அமைந்திருக்கும் அடர் பச்சை நிறம், சூழல் நேயம், இயற்கை வளங்கள், விவசாயம், செழுமை மற்றும் நிலைபேறான தன்மையைப் பிரதிபலிக்கிறது.
வடிவமைப்பு
இந்த இலச்சினை 2017 ஆம் ஆண்டில் ஜனாப். ஏ. யூசுப் (பிரதேச செயலாளர், ஏறாவூர் நகரம்) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஜனாப். ளு.யு. முகம்மது நளீம் (கலாசார உத்தியோகத்தர்) அவர்களால் வடிவமைக்கப்பட்டது.
 

News & Events

31
ஜூலை2026
நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

    "நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா"...

15
ஜூன்2026
பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2026

பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2026

      பிரதேச மட்ட விளையாட்டு விழா...

15
ஜூன்2026
ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்.

ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்.

      ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட்...

« »

குடியுரிமை சாசனம்

Scroll To Top