Print
Parent Category: Top Menu

பொதுமக்களுக்கான விஷேட அறிவித்தல்

 

நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பில் தகுதியான நபர்களைக் கண்டறிதல்.

 

2002ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 7(1)ஆம் பிரிவின்

பிரகாரம் நலன்புரி நிவாரண பலன்களை செலுத்துதல் தொடர்பில் தகுதியான

அனைத்து நபர்களையும் கண்டறிய அரசு தீர்மாணித்துள்ளது. இதன்படி நீங்கள்

அரசின் மூலம் செயற்படும்  சமுர்த்தி,  முதியோர்,  அங்கவீனர்,  சிறுநீரக நோய் மற்றும்

பொது நிதி போன்றவற்றிலோ அல்லது நலன்புரி நன்மைகள் போன்றவற்றின் கீழ்

ஏற்கனவே பயன்பெறுபவராக இருப்பின் அல்லது பயன்பெற தகுதியானவராக இருப்பின்

கீழ்க் காணப்படும் படிவத்தின் படி தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்தில் நீங்கள்

நிரந்தரமாக வசிக்கும் வசிப்பிடத்திற்கு தொடர்புடைய கிராம அலுவலர்,

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,

சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர், முதியோர் உரிமைகள் ஊக்குவிப்பு உத்தியோகத்தர்களால்

வழங்கப்பட்ட சான்றிதழ்களுடன் 2022 செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் உங்களது

பிரிவு கிராம அலுவலரிடம் ஒப்படைக்கும் படி தயவாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.


நிஹாரா மௌஜுத்,

பிரதேச செயலாளர்,

ஏறாவூர் நகர்.

2022-09-05

Application Form / விண்ணப்பப் படிவம்

 

ssnp-notice.jpg

FaLang translation system by Faboba