Print
Parent Category: Top Menu

IMG 0456IMG 0459IMG 0464IMG 0462

 

"நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின்" நோக்கு எனும் அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய மலர்ந்த 2021 ஆம் ஆண்டின் முதலாம் நாளாகிய இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அவர்களின் தலைமையில் விசேட நிகழ்வொன்று நடைபெற்றது.

இதன் போது பிரதேச செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதுடன், பிரதேச செயலகத்தின் அனைத்து ஊழியர்களும் அரச சேவை உறுதியுரை/ சத்தியப் பிரமாணம் மேற்கொண்டனர்.

 COVID 19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் மற்றும் எமது சமூகத்திற்கும் உள்ள பொறுப்புகளை வலியுறுத்தும் வகையில் பிரதேச செயலாளரினால் உரை நிகழ்த்தப்பட்டது. மேலும் சுபீட்சமான இலங்கையினுள் பயனுள்ள பிரஜைகளை, பண்பாடான, ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க ஊழியர்கள் ஒவ்வொருவரும் நேர்மையுடன், தாமதமின்றி, அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை வழங்குமாறும் தனது உரையில் குறிப்பிட்டார்.

அத்துடன் கடந்த 2020 ஆம் ஆண்டில் சிறப்பாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரை (COMMENDATIONS AND CENSURES) பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது விசேட அம்சமாகும்.

 

FaLang translation system by Faboba