சர்வதேச சிறுவர் தின நிகழ்வு - பிரதேச செயலகம் ஏறாவூர் நகரம்.
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிறுவர் தின விழா கடந்த வியாழக்கிழமை (01.10.2026) பிற்பகல் 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
“திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” எனும் தொனிப்பொருளில் அமைந்த இந்நிகழ்வு, உதவி பிரதேச செயலாளர் திரு. யூ.எம். அஸ்லம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எச். முஸம்மில் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும், பிரதேச செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கௌரவ அதிதிகளாகப் பங்கேற்றனர்.
சிறுவர்களின் ஆளுமை விருத்தி, படைப்பாற்றல் மற்றும் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில், சிறுவர்களின் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
நிகழ்வின் முக்கிய அம்சங்கள்:
-
இறைவாழ்த்து (கிராஅத்) மற்றும் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.
-
தலைமை உரை மற்றும் சிறப்புரைகள் ஆற்றப்பட்டன.
-
சிறுவர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் அரங்கை அலங்கரித்தன.
-
2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்திய பிரதேச சிறுவர் கழக அங்கத்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
-
'சமூர்த்தி கெகுளு' பிரதேச மட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
-
பிரதேச செயலகப் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இரண்டு 'திவியட்ட சவியக்' வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான அதிகாரப்பூர்வ கடிதங்கள் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டன.
சிறுவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், அவர்களின் கலைத் திறன்களைக் கொண்டாடும் வகையிலும் அமைந்த இந்நிகழ்வில் ஏராளமான சிறுவர்களும் பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர்.